நீதிமன்ற தீர்ப்புகள்
நீதிமன்ற தீர்ப்புகள்
கிராம சபையைக் கூட்டுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கு அல்ல, கிராம ஊராட்சிக்குத் தான் உள்ளது என்பதையும், கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி தேவையில்லை என்பதையும் உறுதி செய்வதற்காக, ராஜேந்திரபட்டினம் ஊராட்சி மூலம் தமிழ்நாடு அரசுக்கு எதிராக வழக்கு தொடுத்து வெற்றியும் பெற்றுள்ளோம். தீர்ப்பின் நகலை பதிவிறக்கம் செய்ய கீழே சுட்டவும்.
தமிழ்நாடு அரசு, ஊராட்சி செயலாளரைத் தண்டிக்கும் மற்றும் இடமாற்றம் செய்யும் அதிகாரத்தை ஊராட்சித் தலைவரிடமிருந்து பறித்து, அதை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு (கிராம ஊராட்சி) மாற்றும் வகையில், தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் சட்டம் 1994, இல் செய்த திருத்தங்கள் 104 மற்றும் 106 ஐ இரத்து செய்யக் கோரி, 3 பஞ்சாயத்துகள் (கிருஷ்ணசமுத்திரம், மேலணிகுழி & முத்துகாப்பட்டி) மூலம் நாங்கள் வழக்குத் தொடர்ந்துள்ளோம். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
அதோடு, ஜனவரி 5, 2025 அன்று பதவிக்காலம் முடிவடைந்த 28 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்தின் மீது வழக்குத் தொடரவும் உள்ளோம்.