மேற்கண்ட கொள்கையை மனதில் கொண்டு, 'உள்ளாட்சியில் நல்லாட்சி; உள்ளூரில் வளங்குன்றா வளர்ச்சி' என்ற முழக்கத்துடன் இயல்பாக உருவான மக்கள் இயக்கமான தன்னாட்சி, உள்ளூர் அரசுகளை, பொது மக்கள் தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் அரசாக மாற்ற முயன்று வருகிறது. 2017 முதல் 'உள்ளாட்சி உங்களாட்சி' என்ற பெயரில் உள்ளூர் தன்னாட்சி, கிராம சபைகள் மற்றும் கிராம தன்னாட்சிக்காகச் செயல்பட்டு வரும் நாங்கள், 2018 ஆம் ஆண்டு தமிழ்நாடு சங்கப் பதிவுச் சட்டம்-1975 இன் கீழ் 'தன்னாட்சி' என்று சங்கமாகப் பதிவு செய்து, இளைஞர்கள், பெண்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊராட்சிப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஒரு துடிப்பான இயக்கமாகச் செயல்பட்டு வருகிறோம்.
நமது தன்னாட்சி, அதிகாரப்பரவல் கொள்கையுடன், விளிம்பிலும் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் முதற்கொண்டு பொது நிர்வாகத்தில் பங்கேற்பதற்கான தகவல்களையும் அதிகாரத்தையும் அவர்கள் பெறுவதற்கு, குரலற்றவர்களின் குரலாக தொடர்ந்து எதிரொலித்து வருகிறது.
நமது ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதில் நம்பிக்கை கொண்ட அனைவரையும், உள்ளூரில் தொடங்கி அனைத்து மட்டங்களிலும் மக்களை மையமாகக் கொண்ட அரசு நிர்வாகத்தை உருவாக்க எங்களுடன் கைகோர்க்குமாறு அழைக்கிறோம். அனைவரும் தயங்காமல் எங்களைத் தொடர்பு கொள்ளவும்.










